** அஸ்ஸலாமு அலைக்கும் ** வேலை வாய்ப்பு பற்றிய செய்தியை உங்களுக்கு தெரிந்தால் விபரங்களை ஈமெயில் அனுப்புங்கள் - mss7862003@gmail.com **

LPT.

லால்பேட்டை ஓர் அறிமுகம்
சரித்தில் சாதனை செய்த சன்மார்கத் தொன்டர்கள் தோன்றிய லால்பேட்டையை இங்கே அறிமுகம் செய்கிறோம். அல்லாஹ்வின் நாமம் கூறி அல் ஹம்தின் புகழும் கூறி அழைக்கிறோம் வாருங்கள் படித்தறிவோம்.

நவாப்புகளின் பொற்கால ஆட்சியில் தம் சிறந்த முத்திரை பதித்த வித்தகர்களாம் ஆற்காட்டு நவாபுகளின் ஆட்சித்தொடரில் சிறந்த ஆட்சி அமைத்து மக்களின் உணர்வுகளை உரமாய், விழுதாய் எடுத்து பற்பல சிறந்த சேவைகளை செய்த ஜனாப் ‘அன்வருத்தீன், அவர்களின் அமைச்சரவையில் “லால்கான்,,எனும் பெறற்கரிய செல்வ மகனின் கடைகண் பார்வையில் பட்டதுதான் இந்த லால்பேட்டையாகும் இவ்வூரை நிர்மானித்த பெருமை இவரையே சாரும்.

மிகச்சிலரே சொற்பமாய் எங்கெங்கோ வாழ்ந்து வந்த சின்னஞ்சிறு கிராமமாய் இவ்வூர் இருந்தது என்ரும், லால்கான் வரவுக்கு முன்னாள் ஊரேஇல்லை என்றும் இருவேறு கருத்துக்கள் இருந்தாலும் லால்கான் வரவுக்கு பின்புதான்    ஊரின் வளர்ச்சி களை கட்டத்துவங்கி உள்ளது என்பதைபுரிய முடிகிறது.

அமைச்சர் லால்கான் இப்பகுதியில் தங்கி சேவையாற்றியுள்ளார். அவர் தங்கியிருந்த பகுதிக்கு “கான் இருப்பு,, எனும் சொல் வழங்கிவந்துள்ளது. அது இன்ரும் “காங்கிருப்பு,, என அழைக்கப்படுகிறது. இன்னும் அப்பகுதி பாசனத்திற்கென அவர் வீராணத்திலிருந்து கொண்டுவந்துள்ள வாய்காலுக்குகூட “கான் வாய்கால்,, என இன்று வரை அழைக்கப்படுகிறது.

இப்படியாய் தன் நிர்வாகத்தை இங்கே துவங்கிய லால்கான் தன் குற்றேவலர்களை ஒருபகுதியில் தங்கவைத்துள்ளார். இன்ரு குற்றேவலர்-கொத்தவால் தெரு,என அழைக்கப்படுகிறது. அத்துடன் இதை ஒரு பேரூராக மாற்றியமைக்க முனைந்த லால்கான் அவர்கள் ஜாமிஆ மஸ்ஜிதை முதன் முதலாக் சிறிய அளவில் நிறுவி அதனை சுற்றி வடக்குதெரு,தெற்குதெரு,கீழத்தெரு,மேலத்தெருவிலும் முஸ்லிம்களை கொண்டுவந்து குடியமர்த்தினார்,

இதனுடன் கொற்றேவலர்-கொத்தவால்தெருவும் இணைந்திருந்தது. அவர்களின் இஸ்லாமிய வாழ்வு இங்கே தழைக்க ஆரம்பித்தது. இப்பகுதிக்கு வித்திட்டு வளர வைத்த அந்த மாபெரும் மனிதரான லால்கானின் பெயரே இன்றுவரை நின்று நிலவுகிறது.

அத்துடன் பாகு பாடற்ற இஸ்லாமிய உணர்வுள்ள லால்கான் அவர்கள் வீராணக்கரை யோரம் இன்று, சத்திரம்,சாவடி என அழைக்கப்படுகின்ற ஒரு சத்திரம் கட்டி அதன் அருகே கோவில் ஒன்ரும் அமைத்து, மேலும் ஒரு குளமும் தோண்டியுள்ளார், அந்த குளம் திருக்குளம் என்று இன்று வரை கூறப்படுகிறது, அதன் நாற்புறத்து கரையிலும் எட்டு ஜாதி மக்களை லால்கான் குடியமர்த்தினார்,

இப்படி ஜாமி ஆ மஸ்ஜிதின் பகுதியில் முஸ்லீம் களும் வீராணப்பகுதியில் ஹிந்துக்களும் ஒரே சம காலத்தில் குடியமர்த்தப்பட்டு அவர்களின் வாழ்வுக்கான தேவைகளும் லால்கானால் நிவர்த்திக்கப்பட்டு வளர ஆரம்பித்த இந்த லால்பேட்டை இன்று ஆல் போல் தழைத்து அருகு போல் வேறூன்றி தன்படர்ந்த கொப்புக் கிளைகளை நாற் புறமும் விரித்து ஒரு நகர பேரூராய் வளர்ந்துள்ளது அல் ஹம்துலில்லஹ்.

மத நல்லிணக்கத்தின் மறு பெயருக்கு உதாரணமாய் விளங்கி வரும் இந்த லால்பேட்டை 1775 ம் ஆண்டுக்கு முன்பு லால்கான் உருவாக்கிய சமத்துவபுரம்.
நன்றி : LALPET.COM