குர்ஆன்
மனனம் மற்றும் எண்ணக்கரு தொடர்பான தேசியப் பரீட்சையில் பங்குபற்றுவதற்காக
75000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் 12ஆவது தேசிய குர்ஆன் மனன மற்றும்
எண்ணக்கருப் போட்டிஇ அக்டாபர் 11 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
இப்போட்டிஇ கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சின் குர்ஆன் மற்றும் இத்ரத்
பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 43000 பேர்இ இக்குர்ஆன் மனனப் பரீட்சையில் தோற்றுவதற்குப் பதிவு
செய்துள்ளதுடன் மற்றும் 23000 பேர் குர்ஆனிய எண்ணக்கருப் பிரிவில் பதிவு
செய்துள்ளனர். மேலும் 9500 பேர் குர்ஆன் விரிவுரைப் பிரிவில் பெயர்களைப் பதிவு
செய்துள்ளனர்.
60 தொடக்கம் 100 வரையான புள்ளிகளைப் பெறுவோர் இப்பரீட்சையில் சித்தியடைவதுடன்
குர்ஆன் மற்றும் இத்ரத் பிரிவிடமிருந்து அதற்கான சான்றிதழ்களையும் பெற்றுக்
கொள்வர். அவர்களுள் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்துவோர் விருதுகள் வழங்கி
கௌரவிக்கப்படுவர்.
இவ்வருட பரீட்சை மிகச் சிறப்பாக வரவேற்கப்பட்டதுடன்இ குர்ஆன் மனனப் பரீட்சையில்
தோற்றுவோரின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்துள்ளது. குர்ஆன் மனன விடயத்தை
மேம்படுத்துவதில் குர்ஆனிய நிறுவனங்களும் மக்களும் அதிகளவு அவதானம்
செலுத்துகின்றனர் என்பதையே இது காட்டுகின்றது.
பரீட்சைக்காகப் பெயர்களைப் பதிவு செய்தோர்இ நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள
குர்ஆனிய நிறுவனங்களினால் நடத்தப்படும் குர்ஆன் மனனப் பாடநெறிகளில் கலந்து
கொள்வர்.
http://iqna.ir/ta/news_detail.php?ProdID=1283491
0 comments:
Post a Comment