** அஸ்ஸலாமு அலைக்கும் ** வேலை வாய்ப்பு பற்றிய செய்தியை உங்களுக்கு தெரிந்தால் விபரங்களை ஈமெயில் அனுப்புங்கள் - mss7862003@gmail.com **

Sunday, September 8, 2013

ஏர்-இந்தியா நிறுவனம் அலட்சியம் இந்திய ஹஜ் பயணிகளுக்கு விமானம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்திய ஹஜ் கமிட்டியின் முதன்மைச்செயல் அலுவலர் குற்றச்சாட்டு இந்திய யூனியன்முஸ்லிம் லீக் நடவடிக்கை!

இந்தியாவிலிருந்து புனித புனிதஹஜ் பயணிகளை அழைத் துச் செல்ல விமானங்களை   ஒதுக்காமல் ஏர்-இந்தியா நிறுவனம் அலட்சியமாக இருப்பதாக இந்திய ஹஜ்கமிட்டியின் முதன்மைச்செயல் அலுவலர் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.இதுவிஷயத்தில் உடனடி மேற்கொள்ளுமாறு இந்திய யூனியன்முஸ்லிம் லீக் மத்தியஅரசிடம் தொடர்பு கொண்டுஅரசிடம் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளது.

 இந்திய ஹஜ் கமிட்டியின்முதன்மை செயல் அலுவலர்டாக்டர் அத்தாஹுர் ரஹ்மான்மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்கூறிய தாவது-2013-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து புனித ஹஜ் பயணம்செய்யும் ஹாஜிகள் செப்டம்பர் 7-ம் தேதியில் இருந்து புறப்படுவார்கள் என பயணத் திட்டம்ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், இதுவரை புனிதப்பயணிகளுக்கான விமானம்ஒதுக்கீடு செய்யப்படாததுஅறிந்து ஹஜ் பயணிகள் பெரும்குழப்பமும், பதற்றமும் அடைந் துள்ளனர். 

இந்திய ஹஜ் பயணிகளைஏற்றிச் செல்ல ஏர்-இந்தியா நிறுவனம் தயாராக இல்லைஎன்பதோடு அக்கறையும்காட்டவில்லை. ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு ஆண்டொன் றுக்கு 800 முதல் 900 கோடிரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இவ்வளவு வருமானம்வந்தும் ஹாஜிகள் ஏப்ரல் மாதமேதேர்வு செய்யப்பட்டு, அதன்பின்விமானம் புறப்படும் தேதியும்அறிவிக்கப்பட்டும், விமானம்ஒதுக்கீடு செய்யப் படாததுபெரும் வேதனையைத்தருகிறது.கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து புனித ஹஜ்ஜுக்கு ஒருலட்சத்து 25 ஆயிரம் பேர் அரசுமூலம் சென்றனர். ஆனால், இந்தஆண்டு அது குறைக்கப் பட்டுஒரு லட்சத்து 21 ஆயிரத்து 420பேர் மட்டுமே தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதில்உச்சநீதிமன்ற உத்தரவின்படிசிறப்பு ஒதுக்கீடாக 500 பேர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 500 பேரில்அரசுக்கு 200-ம், உயர் அதிகாரிகளுக்கு 300-ம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோக மற்றவர்கள் காத்திருப்போர் பட்டியலில்வைக்கப்பட்டுள்ளனர். ஹஜ்பற்றிய செய்திகளை அவ்வப்போது இணைய தளம் மூலம்அறிவிப்பு செய்து வருகிறோம். இவ்வாறு இந்திய ஹஜ்கமிட்டியின் முதன்மை செயல்அலுவலர் தெரிவித்தார்.

இந்திய யூனியன்முஸ்லிம் லீக் நடவடிக்கை!

இந்திய ஹஜ் கமிட்டியின்முதன்மை செயல் அலுவலர்பேட்டி வெளிவந்ததும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தமிழ்நாடு மாநில வக்ஃபு மற்றும்ஹஜ் விவகார செயலாளர்திருப்பூர் எம்.ஏ. சத்தார், எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.யுடன்தொடர்புகொண்டு தகவல்தெரிவித்தார். உடனடியாகஅப்துல் ரஹ்மான் எம்.பி., மத்தியவெளியுறவுத்துறை இணையமைச்சரும், இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் தேசியத்தலைவருமான இ. அஹமதுசாஹிபின் கவனத்துக்குகொண்டு சென்றார்.

 இ.அஹமது சாஹிப் மத்தியவிமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத்சிங்கிடம் இதுபற்றி எடுத்துக்கூறியதைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கைகளில் அஜீத்சிங் இறங்கியுள்ளார். அதன்அடிப்படையில் இன்று காலைபுதுடெல்லியில் விமானப்போக்குவரத்து துறை மற்றும்ஏர்-இந்தியாவின் உயர்அதிகாரிகள் கலந்து கொண்டகூட்டத்தை தனது தலைமையில் நடத்தினார். இதில் ஹஜ்விவகாரச் செயலாளர் பிரபக்குமாரும் பங்கேற்றார். இந்தியாவிலிருந்து புறப்படும் புனித ஹஜ் பயணி களைஅழைத்துச் செல்ல ஏர்-இந்தியா நிறுவனம் ஒப்புக் கொண்டுஅதற்கான பணத்தையும் பெற் றுள்ளது. ஒவ்வொரு ஹாஜியிடமிருந்தும் ரூ.26 ஆயிரம்,மத்திய அரசின் விமானக்கட்டண மானியம் ரூ.39 ஆயிரம்ஆக ரூ.65 ஆயிரம் ஒருபயணிக்கு ஏர்-இந்தியாகட்டணமாக வசூலித்திருந்தது.410 பேர் கொண்ட விமானம்மூலம் புனித ஹஜ் பயணிகள்புறப்படுவதற்கு ஒப்புக்கொண்டிருந்த நிலையில்தற்போது தங்களிடம் விமானங்கள் இல்லை. 270 பேர் கொண்டவிமானத்தை வேண்டுமானால்ஏற்பாடு செய்கிறோம் என கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு ஹாஜிகள் கவலை

தமிழ்நாட்டில் புனித ஹஜ்பயணிகள் வரும் 24-ம் தேதிமுதல் புறப்படுவார்கள் எனபயணத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கும் இதுவரை விமானம் ஒதுக்கீடுசெய்யப்படவில்லை என்பதுபெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னையிலிருந்துபுறப்படுகின்றவர்கள் தமிழ்நாடு,புதுவை, அந்தமான் நிக்கோபார்பகுதிகளிலிருந்து வந்து செல்லவேண்டும். விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அவர்கள் பயண தேதிதெரியாமல் ரயிலில் முன்பதிவுசெய்ய முடியாமல் தவித்துவருகின்றனர்.

0 comments:

Post a Comment

Photobucket